16YearsOfBilla : பில்லா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

billa ajith movie

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பில்லா. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். நமீதா, பிரபு, ரஹ்மான், ஆதித்யா மேனன், சந்தானம், யோக் ஜபீஹேசல் கீச் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தை சினிமாவில் மிகவும் ஸ்டைலிஷ் ஆக காமித்த திரைப்படமும் பில்லா திரைப்படம் தான். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இந்த படம் இருக்கிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்க்க போறேன்! ஹாலிவுட் நடிகர் க்ளின்ட் ஈஸ்ட்வுட்!

இந்த திரைப்படம் இதே தினத்தில் ( டிசம்பர் 14) 2007-ஆம் ஆண்டு தான் வெளியானது படம் வெளியாகி இன்றுடன் 16-ஆண்டுகள் ஆகிறது. எனவே, ரசிகர்கள் அனைவரும் படம் குறித்து தங்களுக்கு பிடித்த காட்சிகளை வெளியீட்டு வருகிறார்கள். இந்த திரைப்படம் அந்த சமயமே எவ்வளவு வசூல் செய்தது படத்தில் முதலில் யார் நடிக்கவிருந்தார் என்ற விவரம் பற்றி பார்க்கலாம்.

வசூல் 

பில்லா திரைப்படம் வசூல் ரீதியாக அந்த சமயமே உலகம் முழுவதும் 48 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 30 கோடி கேரளவில் 2 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு லாபத்தையும் அள்ளி கொடுத்தது.

முதலில் நடிக்கவிருந்த பிரபலம் 

பில்லா திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டது நடிகை அசின் தான். முதலில் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு போட்டஸூட் எல்லாம் அசின் வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் பிறகு கவர்ச்சியான காட்சிகள் கவர்ச்சியான உடை அணியவேண்டிய காரணத்தால் அசின் படத்தில் இருந்து வெளியேற பிறகு நயன்தாரா படத்தில் நடித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
sanjay rai kolkata
BiggBossTamilSeason8
DMK Candidate VC Chadrasekar - NTK Candidate Seethalakshmi
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai