மூன்று ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடித்த அசோக் செல்வன்! மனைவி கீர்த்தி பாண்டியன் ரியாக்சன்?

ashok selvan keerthi pandian

நடிகர் அசோக் செல்வன் கடந்த செப்டம்பர் மாதம் நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இருவரும் படங்களில் நடித்து கொண்டும் வருகிறார்கள். அந்த வகையில், அசோக் செல்வன் தற்போது அசோக் செல்வன் இயக்குனர் சிஎஸ் கார்த்திகேயன் என்பவர் இயக்கத்தில் ‘சபாநாயகன் ‘ என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகைகள் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி ஆகியோர்  நடித்துள்ளார்கள். இப்படம் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக இறங்கி இருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சவுத்ரி  படத்தின் இயக்குனர் சிஎஸ் கார்த்திகேயன் என பலரும் கலந்துகொண்டார்கள். அதில் அசோக் செல்வன் இந்த படம் ‘சபாநாயகன் ‘  பற்றியும் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலையும் அளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தயாரிக்க போகும் முதல் படம் யாருடைய படம் தெரியுமா?

முதலில் படம் பற்றி பேசிய நடிகர் அசோக் செல்வன் ” இந்த படம் ஒரு ஜாலியான கதைகளத்தை கொண்ட படமாக இருக்கும். இந்த படத்தில் நகைச்சுவை மற்றும் நடனத்திற்காக நிறைய ஒத்திகை செய்தேன்.  இந்த இரண்டு விஷயங்களுக்காக நான் இதுவரை ஒத்திகை செய்து கூட பார்த்தது இல்லை முதன் முறையாக நான் இந்த ‘சபாநாயகன் ‘ படத்திற்காக ஒத்திகை செய்து பார்த்தேன். இந்த படத்தின் மூலம் இது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது.

முதல் காதல், பள்ளிக்கூடம், வாழ்க்கை போன்ற அனுபவங்களை மறக்கவும் முடியாது, மனதில் இருந்து நீக்கவும் முடியாது. அதனை மையமாக வைத்து தான் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது” என தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் படத்தில் மூன்று ஹீரோயின்களுடன் நடித்திருக்கிறீர்கள் இதற்கு உங்களுடைய மனைவி என்ன சொன்னார்? என்ற கேள்வியை கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த அசோக் செல்வன் ” படத்தில் மூன்று கதாநாயகிகளுடன் நெருக்கமாக நடிப்பது குறித்து என்னிடம் இப்போது மட்டுமில்லை எப்போதுமே கேட்கப்படுகிறது. என்னுடைய மனைவி கீர்த்தி அவ்வாறு செய்வதை தவறாக நினைக்கவில்லை படத்திற்காக நடிக்கிறேன் இது என்னுடைய தொழில் என்பதை அவர் புரிந்து கொள்கிறார்” என அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்