ஒரே நாளில் மோதிக் கொள்ளும் புதுமண தம்பதிகள் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்.!
தமிழ் சினிமாவின் புதுமணத் தம்பதிகளான அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் நடித்த படங்கள் ஒரேநாளில் மோதிக் கொள்கிறது. நடிகர் அசோக் செல்வனும் நடிகை கீர்த்தி பாண்டியனும் பல வருட கால டேட்டிங்கிற்கு பிறகு கடந்த செப்டம்பர் 13 -ஆம் தேதி திருநெல்வேலியில் தங்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள்.
திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இருவரும் படங்களில் நடித்து கொண்டும் வருகிறார்கள். இந்த நிலையில், அசோக்கும் கீர்த்தியும் டிசம்பர் 15 ஆம் தேதி பாக்ஸ் ஆபிஸில் மோத உள்ளனர்.
Husband vs Wife at the box office on December 15.@AshokSelvan‘s jolly entertainer #SabaNayagan and @iKeerthiPandian‘s intense drama #Kannagi to release on the same date.
A unique juncture for the newlyweds ???? pic.twitter.com/GCxI6IbKqh
— Siddarth Srinivas (@sidhuwrites) November 26, 2023
ஆம், அசோக் செல்வன் நடித்துள்ள ‘சபாநாயகன்’ என்ற திரைப்படம் வருகிற டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது. அதேபோல, கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடித்திருக்கும் ‘கண்ணகி’ என்ற படமும் அதே நாளில் வெளியாகவுள்ளது.
நிஜ வாழ்க்கையில் கணவன் மனைவியாக மாறியுள்ள புதுமணத் தம்பதிகளான கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இருவரின் ‘கண்ணகி’ மற்றும் ‘சபாநாயகன்’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, வெளியாகவுள்ளது.
இதற்கிடையில், பா.ரஞ்சித் தயாரிப்பில் புதுமண தம்பதிகள் நடித்திருக்கும் ‘புளூ ஸ்டார்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. சமீபத்தில் வெளியான பாடல் வீடியோ, இந்த ஜோடியின் அசாத்தியமான காதல் கெமிஸ்ட்ரி நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது!ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சமுத்திரக்கனி!
சபா நாயகன்
சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் ‘சபா நாயகன்’. அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல், கேப்டன் மேகவாணன் இசைவாணன் ஆகியோர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
கண்ணகி
ஷாலின் ஜோயா இயக்கிய ‘கண்ணகி’ படத்தில் கீர்த்தி பாண்டியன் கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஆதேஷ்வர், அம்மு அபிராமி மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். E5 என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்கைமூன் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்க, ஜே அனூப் சீலின், ஷான் ரஹ்மான் ஆகியோர் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.