என்னது…! ‘நா ரெடி’ பாடலை விஜய்யுடன் பாடியவர் இவரா.? எப்படி இருக்க போகுதோ….

நடிகர் விஜய் வரும் ஜூன் 22 -ஆம் தேதி 49 -வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு, அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் முதல் பாடலான “நா ரெடி” என்ற பாடல் வெளியாகிறது.

இந்நிலையில், நாளை மறுநாள் பாடல் வெளியாகவுள்ள நிலையில், தற்போது பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அனிருத் இசையமைத்துள்ள ‘நா ரெடி’ பாடலில் விஜய்யுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் நடனம் ஆடியுள்ளதாகவும், இப்பாடலை விஜய்யுடன் சேர்ந்து அசல் கோலார் பாடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே, ரசிகர்கள் மத்தியில், ‘நா ரெடி’ பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதன்படி, அசல் கோலார் பாடியுள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், விஜய் தனது பாடலில் தனி சிறப்பு தனியாகவே கொண்டு வருவது வழக்கம், இந்த முறை அசல் கோலார் உடன் இருப்பதால் எப்படி வந்திருக்கிறது என்று நீங்களே சொல்லுங்க….
