கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன்! விட்டு விலக முடிவு செய்த மனைவி?

தர்ஷன் : கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருக்கும் நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் கைது ஆகி இருக்கும் நிலையில், அவரை விட்டு அவருடைய மனைவி விஜயலட்சுமி விலகி செல்ல முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 9-ஆம் தேதி பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, விசாரணை செய்ய தொடங்கிய காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது அதன் அடிப்படையில், 11 பேரை கைது செய்தனர். அவர்களிடம் கைது செய்து விசாரணை செய்த போது சடலமாக இருந்தது சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்றும் அவர் தர்ஷனின் ரசிகர் மன்ற தலைவைர் எனவும் , கூலிப்படையை ஏவி நடிகர் தர்ஷன் அவரை கொலை செய்ததாகவும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏனென்றால், தர்ஷன் நடிகை பவித்ரா கவுடாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். ஏற்கனவே, தர்ஷனுக்கு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியும் கூட பவித்ரா கவுடாவுடன் நெருக்கமாக பழகி வருவது இதனால் தர்ஷன் விஜயலட்சுமி ஆகியோருக்கும் இடையே பிரச்சனையும் ஏற்பட்டு வந்து இருக்கிறது. இதுவே ஒரு சர்ச்சையாகவும் பலமுறை வெடித்து இருக்கிறது.
இந்த சூழலில், தர்ஷனுக்கு விஜயலட்சுமிக்கு இடையே பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்து கொலையான தர்ஷனின் தீவிர ரசிகர் ரேணுகாசாமி பவித்ரா கவுடாவின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆபாசமாக திட்டி குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். இதனை பவித்ரா கவுடா தர்ஷனிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தர்ஷன் ரேணுகாசாமியை நேரில் அழைத்து பேச முடிவெடுத்துள்ளார்.
பின் கடந்த 8-ந் தேதி இரவு காரில் ரேணுகாசாமி அழைத்து வரும் படி, ராகவேந்திரா என்பவரிடம் தர்ஷன் கூற, உடனே அவர் சென்று வினய் என்பவருக்கு சொந்தமான பழைய கார் குடோன் பகுதிக்கு அழைத்து சென்று அங்கு சிலரை வைத்து ரேணுகாசாமியை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவத்தில் கைதாகி இருக்கும் 11 பேர் கொடுத்த தகவலின் பெயரில் காவல்துறையினர் தர்சனையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் தர்ஷன் கைதாகி இருக்கும் நிலையில், அவரை விட்டு மனைவி விஜயலட்சுமி விலக முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை முன்னதாக சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருந்த நிலையில், அது அனைத்தையும் நீக்கி உள்ளார். எனவே, தர்ஷனை விவாகரத்து செய்ய அவர் விவாகரத்து செய்ய முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதனை பற்றி அவர் விளக்கம் அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025
அனுபவத்தில் சொல்லுறேன்..ரசிகர்கள் வேற.. வாக்காளர்கள் வேற! ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!
February 22, 2025
“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்
February 21, 2025