மாநகரம் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? புகைப்படங்களை பார்த்து நொந்து போன ரசிகர்கள்!

நடிகர் ஸ்ரீயின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வரும் நிலையில்,க உடல் எடையை குறைத்தாரா? இல்லை வேறு ஏதாவது காரணமா என நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Sri

நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது என்று சொல்லலாம். ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பால் புகழ்பெற்ற ஸ்ரீ, தற்போது முற்றிலும் மெலிந்து வேறு மாதிரியான தோற்றத்தில் மாறியிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில், குறிப்பாக அவர் ஒரு  இன்ஸ்டாகிராம் கணக்கில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் இதற்கு காரணம். இதில் அவர் அரைகுறை ஆடைகளுடன் காணப்படுவதாகவும், அவரது உடல் மற்றும் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் தகவல் என்னவென்றால், நடிகர் ஸ்ரீ பட வாய்ப்புகள் இல்லை என்கிற காரணத்தால் அவர் போதைக்கு அடிமையாகி தான் இப்படி  மாறிவிட்டார் எனவும் தகவல்கள் பரவ தொடங்கியுள்ளது. ஆனால், தற்போது அவரது தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு என்ன கரணம் என்பது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. சிலர் இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை முடிவாக இருக்கலாம் என்றும், மற்றவர்கள் இது அவருடைய உடல்னால குறைவு காரணமாக இப்படி ஆகியிருக்கலாம் எனவும் கூறி வருகிறார்கள். விரைவில் இது குறித்து அவருடைய தரப்பில் இருந்து விளக்கம் அழைக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஸ்ரீ முதன்முதலில் ‘கனா காணும் காலங்கள்’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமானவர். அதன்பின், 2017ஆம் ஆண்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இந்தப் படத்தில் அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’ போன்ற படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். சமீபத்தில், 2023இல் வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படத்தில் மூன்று தம்பதிகளின் கதையை மையமாகக் கொண்டு, விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருந்தார். இப்படமும் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்