காசநோய் விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்டார் ஆரி
- சென்னை ஆர்.கே நகரில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் இன்டர்நேஷனல் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது.
- இந்த நிகழ்வில் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நடிகர் ஆரி கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.சென்னை ஆர்.கே நகரில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் இன்டர்நேஷனல் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது.
காசநோய் முகாம் டாக்டர் இசாமுதீன் பாப்பா தலைமையில் நடிகர் ஆரி முன்னிலையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் நடிகர் ஆரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.ரோட்டரி இந்தியா டிபி கன்ரோல் புரோகிராம் என்ற அமைப்பும் ரோட்டரி டிஸ்ரிக் 3232 ரோட்டரி கிளப் மெட்ராஸ் சௌத் வெஸ்ட் மற்றும் சென்ரல் ஆகியவை சேர்ந்து ரோட்டரி இண்டர்நேஷனல் சார்பில் நடத்தியது.இந்த காசநோய் விழிப்புணர்வு முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
காசநோய் அறிகுறிகளான தொடர் காய்ச்சல், மூன்று வாரத்திற்கு அதிகமான இருமல்,சளியுடன் கலந்து இரத்தம் வந்தாலோ உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் என்று காசநோய் தொடர்பாக பல விழிப்புணர்வு தகவல்கள் மக்களிடம் கூறப்பட்டது.
காசநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கடந்த 2004 ம் ஆண்டு முதல் உருவாக்கி 60ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களின் நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளித்து பலர் பயன் அடைந்துள்ளதாக அந்த நிகழ்வில் கூறப்பட்டுள்ளது.