அடுத்த இலக்கை நோக்கி நகரும் ஆர்யா! என்ன இலக்கு தெரியுமா?
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் அறிந்தும், அறியாமலும் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நடிகர் ஆர்யா சைக்கிளிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனையடுத்து, இவர் இன்று பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் பங்கேற்க உள்ளார். இப்போட்டியானது ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நடக்கவுள்ள நிலையில், இப்போட்டியின் பந்தய தூரம் 1200 கிலோ மீட்டர்.
இதனையடுத்து, தனது குழுவினருடம் ஆர்யா பங்கேற்க உள்ளார். ஆர்யாவின் சீருடையை நடிகர் சூர்யா அறிமுகம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.