arya and santhanam [file image]
சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள ‘இங்க நான்தான் கிங்கு’ படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனத்தை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இந்த படம் சந்தானத்திற்கு பெரிய வெற்றிப்படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சந்தானம் நடிக்கவுள்ள அடுத்த படங்களுக்கான சிறிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, அடுத்ததாக நடிகர் சந்தானம் காமெடி கலந்த பெய் படம் ஒன்றில் நடிக்கவுள்ளாராம். அது தில்லுக்கு துட்டு படத்தின் அடுத்த பாகமாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறதாம். தில்லுக்கு துட்டு முதல் பாகம் மற்றும் இரண்டாவது பாகம் எப்படி காமெடி கலந்த கதையம்சத்தை கொண்ட படமாக இருக்குமோ அதே அளவிற்கு ஒரு நல்ல படமாக அதனுடைய அடுத்த பாகமும் இருக்குமாம்.
இந்த திரைப்படத்தை நடிகர் ஆர்யா தான் நல்ல ஒரு பட்ஜெட்டில் தயாரிக்கவும் இருக்கிறாராம். அந்த படத்தை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக தன்னை வைத்து வடக்குப்படி ராமசாமி என்ற பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். இந்த படத்தையும் நடிகர் ஆர்யா தான் தயாரிக்கிறாராம்.
முதலில் தில்லுக்கு துட்டு படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க சந்தானம் திட்டமிட்டு இருக்கிறராம். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறதாம். இந்த படத்தில் நடித்துமுடித்த பிறகு அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
சந்தானத்திற்கும் ஆர்யாவிற்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. இருவரும் இணைந்தே ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களில் நடித்து வந்து இருக்கிறாரகள். எனவே ஆர்யா தனது நண்பர் ஆர்யாவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சந்தானத்திற்கு மார்க்கெட் தற்போது நன்றாக இருப்பதால் கண்டிப்பாக ஆர்யா அவரை வைத்து தயாரிக்கும் படத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…