நடிகர் சிவகார்திகேயன் மற்றும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இருவருமே மிகவம் நெருங்கிய நண்பர்கள். சிவகார்திகேயன் நடித்த மான்கராத்தே படத்தில் கூட அருண்ராஜா காமராஜ் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் இவர்களுடைய காமெடி காட்சி பெரிதளவில் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும் என்றே சொல்லலாம்.
அந்த படத்தில் இருப்பது போல இவர்கள் இருவருமே நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்கள் தானாம். சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ் இருவருமே ஒரே கல்லூரியில் தான் படித்து வளர்ந்தார்களாம். அந்த சமயம் இவர்கள் இருவருக்கும் இடையே நண்பர்களுக்குள் நடப்பது போல சண்டைகளும் வருமாம். ஆனால், நீண்ட நாட்களுக்கு பிறகு இவர்கள் இருவருமே பேசிக்கொண்டாள் எப்போது பேசாமல் விட்டார்களோ அதில் இருந்து தான் பேசவே தொடங்குவார்களாம்.
முற்றுப்புள்ளி வைக்க கடவுள் இருக்காரு! சிவகார்த்திகேயன் குறித்த கேள்விக்கு டி.இமான் பதில்?
அந்த அளவிற்கு தனக்கு சிவகார்த்திகேயனை மிகவும் பிடிக்கும் என அருண்ராஜா காமராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். அந்த சமயம் தன்னுடன் சிவகார்த்திகேயன் மிகவும் நெருங்கி நண்பர்களாக பழகி வந்த காரணத்தால் சிவகார்த்திகேயன் தன்னிடம் பேசாமல் வேறு நண்பர்களுடன் பேசினால் அருண்ராஜா காமராஜ் மிகவும் கோபப்படுவாராம்.
கோபப்பட்டுவிட்டு அவர்களுடன் எதற்காக பேசுகிறாய் ? என்பது போல கேட்பாராம். இப்போது அவருடன் பழகிய நாட்கள் மற்றும் அவருடன் சண்டைபோடுவதை மிகவும் மிஸ் அருண்ராஜா காமராஜ் மிஸ் செய்கிறாராம். இப்போது திருமணம் எல்லாம் முடிந்து குடும்பம் என்று வந்துவிட்ட காரணத்தால் தனி தனியாக இருவரும் நேரம் செலவழிக்க முடியாமல் இருக்கிறார்களாம். இதனை எமோஷனலாக அருண்ராஜா காமராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், அருண்ராஜா காமராஜ் கடைசியாக நடிகர் ஜெய்யை வைத்து லேபிள் என்ற வெப் தொடர் ஒன்றை இயக்கி இருந்தார். இது மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அதைப்போல, நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய 21-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாகவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…