அருண் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மிஷன் சாப்டர் 1’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மிஷன் சாப்டர் 1
இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மிஷன் சாப்டர் 1. இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை எமிஜாக்சன் நடித்திருந்தார்.
அபி ஹாசன், நிமிஷா சஜயன், பரத் போபண்ணா, ஜேசன் ஷா, இயல் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
வெளியீடு மற்றும் விமர்சனம்
இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. அயலான் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் வெளியானாலும் கூட மிஷன் சாப்டர் 1 படமும் மக்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தது என்றே சொல்லலாம். வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான்! ‘லவ்வர்’ படத்துக்கு குவியும் பாராட்டுக்கள்!
ஓடிடி ரிலீஸ்
இந்த திரைப்படத்தை திரையில் சென்று பார்க்காமல் தவறவிட்ட ரசிகர்கள் எப்போது படம் ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது அவர்களுக்காகவே சூப்பரான ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தின் ஓட்டிட்டி ரிலீஸ் தேதி பற்றி தான்.அதன்படி மிஷன் சாப்டர் 1 வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…