“வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினேன்.. இயக்குநர் பாலா சாருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்!

வணங்கான் படத்தில் வாய்ப்பு அளித்ததற்க்கு இயக்குனர் பாலாவிற்கு நன்றி நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

Arun Vijay - Bala

சென்னை : இயக்குனர் பாலா ‘வணங்கான் ‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு, நடிகர் அருண் விஜய்யை வைத்து பாலா படத்தை மீண்டும் இயக்கினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படம் ஆகஸ்ட் வெளியீட்டில் இருந்து ஒத்திவைக்கப்பட்ட பிறகு, தயாரிப்பாளர்களிடமிருந்து ‘வணங்கான்’ பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், படத்தின் நாயகன் அருண் விஜய், இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தற்கு மன நெகிழ்வுடனும், கனத்த இதயத்துடனும் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அருண் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், ஒரு நடிகனாக “எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா” என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற ‘வணங்கான்’ படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை.
ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.

என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில், ‘வணங்கான்’ ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது, தமிழ் சினிமாவில் கங்குவாவுக்கு எதிர்மாறான விமர்சனம் சென்று கொண்டிருக்க நிலையில், ‘வணங்கான்’ படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த பாலா குறித்து பேசியிருப்பது மற்றொரு விவாதத்தை கிளப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்