சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் தனது மகனுக்கே தந்தையாக நடிக்கும் அருண் விஜய்!
நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தில் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் நடிக்க உள்ள நிலையில், அவருக்கு படத்திலும் அருண் விஜய் தந்தையாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சரண் சண்முகம் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் அவர்கள் நடிக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் தந்தையாக நடிப்பதற்கு பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் அது சரி வராத நிலையில் தற்பொழுது அருண் விஜய் அந்த படத்தில் அவரது மகன் ஆர்ணவுக்கு தந்கையாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இதுகுறித்து சண்முகம் அவர்கள் தெரிவிக்கையில், இந்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன் அவரை அணுகியதாகவும், அவர் இந்த படத்தில் நடிப்பதற்கு உடனே சம்மதிக்கவில்லை.
திரைக்கதையை கூறிய பிறகு அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. எனவே இந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்தால் ஊட்டியில் இதற்கான படப்பிடிப்பு தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதில் அருண் விஜய் மற்றும் அவரது மகனும் கலந்து கொண்டனர். அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் மிக உற்சாகமான மற்றும் துறுதுறுப்பான நடிகராக இருப்பதாகவும் இயல்பாகவே அவனிடம் நடிப்பு திறமை அதிகம் இருக்கிறது எனவும், இப்படம் மிக அழகாக உருவாகி வருவதாகவும், இன்னும் தலைப்பிட படாவிட்டாலும் படம் முழுவதும் ஊட்டியில் படமாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.