காட்டு மிராண்டியாக கலக்கும் அருண் விஜய்.! மிரட்டும் ‘வணங்கான்’ டீசர்…

Vanangaan

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘வணங்கான்’. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்படி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை வைத்து பார்க்கையில், இயக்குனர் பாலா தனது பாணியில் மிரட்டி இருக்கிறார்.

அருண் விஜய்யும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடித்திருக்கிறார். அதாவது, மிகவும் ரகட்டாக இதுவரைக்கும் இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்ததில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரக்கனி மற்றும் மிஸ்கின் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடிக்க படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். வணங்கான் படத்தின் பாடல்களுக்கு வைரமுத்து வசனம் எழுதியுள்ளார்.

ஷங்கர் மகள் காதல் திருமணமா? வதந்திக்கு வந்த முற்றுப்புள்ளி!

ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யா படத்தொகுப்பும் மேற்கொள்ளும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்