கடும் போட்டி…போட்ட பணத்தை வசூலிக்குமா க்ராக்? அதிரடி காட்டும் ஆர்ட்டிகல் 370.!
இந்த வார வெள்ளிக்கிழமை (நேற்றைய தினம்) பாலிவுட் சினிமாவில் இரண்டு திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதியுள்ளது. இயக்குனர் ஆதித்யா தத் இயக்கத்தில் நடிகர் வித்யுத் ஜம்வால், நோரா ஃபதேஹி, அர்ஜுன் ராம்பால் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள ‘க்ராக்’ (Crakk) திரைப்படமும், இயக்குனர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே இயக்கத்தில் உருவான ‘ஆர்டிகிள் 370’ படமும் நேற்று (பிப்ரவரி 23 அன்று) திரையரங்குகளில் ஒன்றாக களமிறங்கின.
இதில், ஆர்டிகிள் 370 திரைப்படம் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த 370-வது சட்ட பிரிவை, அரசியல் ரீதியாகக் குற்றம் சாட்டப்பட்ட உண்மைச் சம்பவங்களின் கதையின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படியில், இப்படம் அரசியல் ரீதியாக பேசப்படுகிறது என கருத்துக்கள் வெளியான நிலையில், முதல் நாளில் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதே போல், தமிழ் சினிமாவில் வெளிவந்த அஞ்சான் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு நண்பனாகவும், கத்தி திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்த பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் நடத்துள்ள அதிரடி ஆக்ஷன் படமான ‘க்ராக்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
READ MORE – தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட நடிகர் கமல்.! காத்திருக்கும் பெரிய சம்பவம்…
இந்த நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களின் முதல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெறும் ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆர்டிகிள் 370 திரைப்படம் ரூ.5.75 கோடி வசூலித்துள்ளது. ஆனால், ரூ.80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட க்ராக் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
READ MORE – இளைஞர்களை கொண்டாட வைத்த ‘பிரேமலு’! ஓடிடிக்கு எப்போது வருகிறது தெரியுமா?
இரண்டை காட்டிலும், க்ராக் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருக்கிறது, ஆனால் ஆர்டிகிள் 370 படத்தின் வசூலில் பின் தங்கியுள்ளது. எனினும், வரும் நாட்களில் வசூலில் தீவிரம் காட்டும் என நம்படுகிறது. இரண்டுமே ஹிந்தி மொழியில் மட்டுமே வெளியாகியுள்ளது, க்ராக் படத்தின் வசூல் பட்ஜெட்டை தாண்டுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.