அரண்மணை-3 படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவாவை வைத்து புதிய படம் இயக்க உள்ளாராம் சுந்தர்.சி. அதே நேரத்தில் அரண்மணை-4ஆம் பாகம் தயாராகும் வேலைகளும் நடைபெறுகிறதாம்.
உள்ளதை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி, கலகலப்பு, கலகலப்பு-2, தீயா வேலை செய்யணும் குமாரு என காமெடி அதகளம் பண்ணும் நல்ல சினிமாக்களை தந்தவர் இயக்குனர் சுந்தர்.சி. இவர் பேய் காமர்சியல் பட பாணிக்கு மாறி அரண்மணை 1,2,3 என 3 பாகங்களை எடுத்துள்ளார்.
வசூல் ரீதியாக படம் பெரிய வெற்றிபெற்றாலும், சினிமா ரசிகர்கள் சுந்தர்.சியிடம் நல்ல காமெடி படம் ஒன்றை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்றே சொல்லலாம். அதே போல, இயக்குனர் சுந்தர்.சியும் நடிகர் ஜீவாவை நாயகனாக வைத்து புதியதாக படம் இயக்க உள்ளதாகவும், அந்த படம் காமெடி படமாக உருவாக உள்ளதாகவும், அந்த படத்தில் ராசி கண்ணா ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன.
ஆனால், தற்போது அரண்மணை-3 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை கொடுத்துள்ளது. ஆதலால் அரண்மணை 4 ஆம் பாகம் எடுக்க சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
பொறுத்திருந்து பார்க்கலாம் எந்த படத்தின் அறிவிப்பு முதலில் வருகிறது என்று. ஜீவா படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அரண்மணை-4ஆம் பாகம் எடுக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…