ஜெட் வேகத்தில் படம் உள்ளது! இயக்குனரை பாராட்டிதள்ளிய ஏ.ஆர்.முருகதாஸ்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏற்கனவே வெளியான ‘டிமாண்டி காலணி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதில் சென்னையில் இருக்கும் ஒரு ஏரியாவில் பங்களா ஒன்றில் பேய் இருப்பது போல பயத்தை கிளப்பி திரைகதையை கட்சிதமாக கையாண்டிருப்பார். அது ரசிகர்களுக்கு புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்ததால் படம் நன்றாக ஓடியது.
அவர் அடுத்ததாக இயக்கியுள்ள ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இப்படத்தினை தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பார்த்து வியந்து டிவிட்டரில் ‘படம் ஜெட் வேகத்தில் செல்கிறது. அஜய் ஞானமுத்துவிற்கு வாழ்த்துக்கள் எனவும் கூறினார்.
DINASUVADU