பிரமாண்டமாக நடைபெறப்போகும் அர்ஜுன் மகள் திருமணம்! எப்போது தெரியுமா?
அர்ஜுனின் மகளான நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களின் முன்னிலையில் இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம்
இந்நிலையில் நிச்சயதார்த்தம் மட்டுமே பிரமாண்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், திருமணம் எப்போது நடைபெறும் என்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எந்த தேதியில் எந்த இடத்தில் வைத்து நடைபெறும் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து, தற்போது அதற்கான ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அர்ஜுன் – தம்பி ராமையா குடும்பம் ஒன்றிணைந்த தருணம்! மகன்-மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்…
அதன்படி, ஐஸ்வர்யா – உமாபதி ராமையா இருவருடைய திருமணம் வரும் ஜூன் 10-ஆம் தேதி கெருகம்பாக்கதில் இருக்கும் அர்ஜுனின் பெரிய தோட்டத்தில் தான் நடைபெறவிருக்கிறதாம். அர்ஜுன் தரப்பில் இருந்து பல நட்சத்திரங்கள் மற்றும் தம்பி ராமையா தரப்பில் இருந்து பல நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் வருவார்கள் எனவே பிரமாண்டமாக நடைபெறவேண்டும் என்ற காரணத்தால் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு வருகிறதாம்.
ஏற்கனவே, நிச்சியதார்த்தமும் அதே இடத்தில் தான் நடைபெற்றது. அர்ஜுனுக்கு இந்த இடம் மிகவும் ராசியான பிடித்த இடம் என்பதால் திருமணத்தையும் அதே இடத்தில் வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். எனவே, வரும் ஜூன் மாதம் பிரமாண்டமாக ஐஸ்வர்யா – உமாபதி ராமையா திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.