அர்ஜுன் – தம்பி ராமையா குடும்பம் ஒன்றிணைந்த தருணம்! மகன்-மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்…

Aishwarya - Umapathy

ஆக்சன் கிங் அர்ஜுனின் மகளான நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் உலாவந்த, நிலையில், நேற்று இருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதன் மூலம், இப்பொது தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை திருமண பந்தத்தில் இணைந்துள்ள ஐஸ்வர்யா-உமாபதி ஆகியோர் தங்களது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Arjun (@aishwaryaarjun)

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக இருந்தபோது உமாபதியும் ஐஸ்வர்யாவும் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினார்கள் என கிசுகிசுக்கப்படுகிறது.

#7YearsofKodi: அரசியலில் கலக்கிய தனுஷ்…வில்லியாக மிரட்டிய த்ரிஷா! கொடி படம் மொத்த பாக்ஸ் ஆபிஸ்…

இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது, அது குறித்த தகவல் அவர்களே வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தகவலின் படி, திருமண தேதியை விரைவில் குறித்து உமாபதியின் பிறந்தநாளான நவம்பர் 8ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பிப்ரவரி 2024ல் (தை மாசம்) திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனை நம்புனா வேலைக்கு ஆகாது! அலேக்காக நகர்ந்த டான் இயக்குனர்!

ஐஸ்வர்யா அர்ஜுன் 2013ல் விஷாலின் ‘பட்டத்து யானை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் அவர் தனது தந்தை இயக்கிய மற்றும் எழுதிய கன்னட காதல் நாடகமான ‘பிரேமா பரஹா’ என்ற படத்தில் முக்கியப் கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழில் இந்த படத்திற்கு ‘சொல்லிவிடவா’ என்று பெயரிடபட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
trump tariffs
manoj kumar
Rohit Sharma Zaheer Khan
tn rain update
waqf bill 2025
venkatesh iyer ipl