மீண்டும் அதிரடி சண்டை காட்சி திரைப்படத்தில் களமிறங்கிய அர்ஜுன்
தமிழ் சினிமாவில் இன்று வரை நடிகர் அர்ஜூன் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான “இரும்புத்திரை” திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
மேலும் தெலுங்கில் வெளியான “நா பேரு சூர்யா” படத்தில் அல்லு அர்ஜூனின் அப்பா கதாபாத்திரதில் நடித்து உள்ளார்.
இந்நிலையில் மலையாளத்தில் திலீப் நடிக்கும் “ஜேக் டேனியல்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் அதிரடி சண்டை காட்சி படமாக உருவாகி வருகிறது.