Categories: சினிமா

பிக்பாஸ் வீட்டில் நியாயமாக விளையாடுபவர் ஆரி மட்டுமே-நடிகை சுஜா வருணி.!

Published by
Ragi

பிக்பாஸ் போட்டியாளர்களை குறித்து பல கருத்துக்களை நடிகை சுஜா வருணி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான சுஜா வருணி தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து தனது கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் வயதில் பெரியவர் என்றில்லாமல் சண்டையிலும் , டாஸ்க்கிலும் இளைஞர்களுக்கு ஏற்றார் போல் இறங்கி நின்று சிறப்பாக விளையாடி வந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி. ஆனால் அர்ச்சனா மற்றும் சுசித்ரா என்டரிக்கு பின்னர் அவர் காணாமல் போய் விட்டார் என்று தெரிவித்தார் .

மேலும் மோசமான விளையாட்டை தான் ரம்யா விளையாடி வருகிறார். ஏனெனில் ஆரி-சம்யுக்தாவிற்கு இடையே நடந்த நீதிமன்ற வாதத்தில் ஆரி தருதலை என்று கூறியது உங்களை தான் என்று ரம்யா சம்யுக்தாவிடம் ஏற்றி விட்டார் . அது மட்டுமின்றி அனிதா தனது கதையை கூறி கொண்டிருந்த போது சிரித்தவர்களில் ரம்யாவும் ஒருவர் .அது மிகவும் மோசமான செயலாகும் என்று கூறினார் ‌.

அதே போல் சனம் அவர்கள் இந்த வாரம் சரியாக விளையாடியதாகவும்,  வீட்டில் உள்ள ஒரு சிலர் அவரை கார்னர் செய்வதாக தோன்றுவதாகவும் கூறினார். மேலும் சுசித்ரா பற்றி கூறிய போது , வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் செல்பவர் வெளியே நடந்தவற்றை சொல்ல கூடாது என்ற விதியை சுசித்ரா மீறியதாகவும்,  நீதிமன்ற மேடை டாஸ்க்கில் அவர் நீதிபதி பதவிக்கு பொருத்தமில்லாதவர் என்றும் குற்றம்சாட்டினார்.

அதே போன்று பாலாஜியின் தந்திரத்தால் தலைவி பதவியை பெற்ற சம்யுக்தா அதனை சரியாக செய்யாமல் ஆரியை மட்டுமே தவறு செய்வதாக குற்றஞ்சாட்டி மிக மோசமாக நடத்தியதாக கூறினார் . மேலும் கோபமாக ஆரி பேசினாலும் அதில் தெளிவும் ,உண்மையும் இருந்தது .  பிக்பாஸ் வீட்டினுள் நேர்மையாக நியாயமாக விளையாடுபவர் ஆரி மட்டுமே என்றும் , அவர் வேறு எதையும் கண்டு கொள்ளாமல் தன்னுடைய கேம்மை சரியாக விளையாடுகிறார் என்றும் புகழ்ந்துள்ளார். பாலாஜி மீது இதுவரை கொஞ்சம் மரியாதை இருந்தது ,  தற்போது அதனையும் இழந்து விட்டார் . பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உள்ளதாக குற்றம்சாட்டிய பாலாஜியே இப்போது ஒரு குரூப்பை வைத்து விளையாடுகிறார் என்று சுஜா வருணி குற்றம்சாட்டினார்.

பிக்பாஸ் போட்டியாளர்களை விட பிக்பாஸ் எடிட்டர்கள் தான் தாறுமாறாக விளையாடுகிறார்கள் .  ஏனெனில் வீட்டினுள் நடக்கும் பல விஷயங்களில் மக்கள் எதை பார்க்க வேண்டும் என்று அவர்களே முடிவு செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

‘பிங்க் ஆட்டோ’ திட்டம் : சென்னை பெண்களே விண்ணப்பியுங்கள்..!நவம்பர் 23 தான் கடைசி நாள் …!

‘பிங்க் ஆட்டோ’ திட்டம் : சென்னை பெண்களே விண்ணப்பியுங்கள்..!நவம்பர் 23 தான் கடைசி நாள் …!

சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 'பிங்க் ஆட்டோ' சென்னை…

5 hours ago

இந்தியாவில் களமிறங்கியது ‘மெர்ஸிடஸ் பென்ஸ் AMG G 63’..! விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை…

7 hours ago

‘ஓய்வு பெற்றால் என்ன? ..தேவைப்பட்டால் திரும்ப வருவேன்..’! அலர்ட் கொடுத்த டேவிட் வார்னர்!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…

7 hours ago

‘உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையிலே தீர்வு வேண்டும்’ ..புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…

8 hours ago

டானா புயல் எதிரொலி : 28 ரயில் சேவைகள் ரத்து..! முழு விவரம் இதோ!

டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…

8 hours ago

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

9 hours ago