பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி வீட்டிற்குள் ஒவ்வொரு பிரபலங்கள் வருகை தந்து கொண்டு இருகிறார்கள். முதல் நாளே பிக் பாஸ் அனைவருக்கும் சண்டை வரும் விதமாக டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கூல் சுரேஷிற்கு கேப்டன் பதவி உங்களுக்கு தான் என ஒரு ரிப்பன் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த ரிப்பனை அடுத்ததாக வீட்டிற்குள் வரும் பிரபலத்துடன் வாக்குவாதம் செய்து அந்த ரிப்பனை வைத்துக் கொண்டால் கேப்டனாக இருக்கலாம் என பிக் பாஸ் கூறியிருந்தார். அடுத்ததாக பிக் பாஸ் வீட்டிற்குள் பூர்ணா ரவி வந்தார். வந்தவுடனே கூல் சுரேஷிடம் உங்களை எனக்கு நன்றாகவே தெரியும் என பேசினார்.
பிறகு கூல் சுரேஷ் கேப்டன் பதவி வேண்டுமென்றால் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று பிக் பிக் பாஸ் கூறியதாக கூறினார். பின் வந்த முதல் நாளே எதற்காக வாக்குவாதம் நான் சிறிய பொண்ணு அதனால எனக்கு நீங்கள் விட்டுக் கொடுங்கள் என்று கேப்டன் பதவியை பூர்ணா ரவி கேட்டார் . அதற்கு சுரேஷ் ‘நீங்கள் சிறிய பெண்ணாக இருக்கிறீர்கள் எனவே , இந்த வீட்டில் நான் கேப்டனாக இருந்தால் சரியாக இருக்கும் என்று கூறினார்.
பிறகு பூர்ணா நான் சிறிய பெண்ணாக இருந்தாலும் எனக்கு விளையாட தெரியும் என்பது போல பேசினார் . ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதத்திற்கு செல்வது போல் இருந்ததால் கூல் சுரேஷ் கேப்டன் பதவியை பூர்ணாவிற்கு விட்டுக் கொடுத்தார். அடுத்ததாக கேப்டன் பூர்ணா தான் என பிக் பாஸ் அறிவித்த நிலையில் அவர் அடுத்ததாக வரும் போட்டியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டும். அடுத்ததாக ரவினா உள்ளே சென்றுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…