முதல் நாளே வாக்குவாதம்! கேப்டன் பதவியை அவருக்காக விட்டு கொடுத்த கூல் சுரேஷ்!

poornima ravi Cool Suresh

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி வீட்டிற்குள் ஒவ்வொரு பிரபலங்கள் வருகை தந்து கொண்டு இருகிறார்கள். முதல் நாளே பிக் பாஸ் அனைவருக்கும் சண்டை வரும்  விதமாக டாஸ்க் ஒன்றை  கொடுத்துள்ளார். முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கூல் சுரேஷிற்கு கேப்டன் பதவி உங்களுக்கு தான் என ஒரு ரிப்பன் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த ரிப்பனை அடுத்ததாக வீட்டிற்குள் வரும் பிரபலத்துடன் வாக்குவாதம் செய்து அந்த ரிப்பனை வைத்துக் கொண்டால் கேப்டனாக இருக்கலாம்  என பிக் பாஸ் கூறியிருந்தார்.  அடுத்ததாக பிக் பாஸ் வீட்டிற்குள் பூர்ணா ரவி  வந்தார். வந்தவுடனே கூல் சுரேஷிடம் உங்களை எனக்கு நன்றாகவே தெரியும் என பேசினார்.

பிறகு கூல் சுரேஷ் கேப்டன் பதவி வேண்டுமென்றால் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று பிக் பிக் பாஸ் கூறியதாக கூறினார்.  பின் வந்த முதல் நாளே எதற்காக வாக்குவாதம் நான் சிறிய பொண்ணு அதனால எனக்கு நீங்கள் விட்டுக் கொடுங்கள் என்று கேப்டன் பதவியை பூர்ணா ரவி கேட்டார் . அதற்கு சுரேஷ் ‘நீங்கள் சிறிய பெண்ணாக இருக்கிறீர்கள் எனவே , இந்த வீட்டில் நான் கேப்டனாக இருந்தால் சரியாக இருக்கும் என்று கூறினார்.

பிறகு பூர்ணா நான் சிறிய பெண்ணாக இருந்தாலும் எனக்கு விளையாட தெரியும் என்பது போல பேசினார் . ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதத்திற்கு செல்வது போல் இருந்ததால் கூல் சுரேஷ் கேப்டன் பதவியை பூர்ணாவிற்கு விட்டுக் கொடுத்தார்.  அடுத்ததாக கேப்டன் பூர்ணா தான் என பிக் பாஸ் அறிவித்த நிலையில் அவர் அடுத்ததாக வரும் போட்டியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டும். அடுத்ததாக ரவினா உள்ளே சென்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்