நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவிற்குள் நுழைந்த காலகட்டத்தில் இருந்தே நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக நயன்தாராவுக்கு அடுத்தபடியாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக நடிக்கும் நாயகி என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்று பலரும் கூறுவது உண்டு.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட படங்களில் நடித்துமுடித்துள்ளார். இதில் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் வருகின்ற நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும்நிலையில், நேற்று படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷிடம் பத்திரிகையாளர்கள் பல கேள்விகள் கேட்டனர். அதற்கு அவரும் தயக்கம் காட்டாமல் பதில் அளித்து வந்தார் . அப்போது செய்தியாளர் ஒருவர் “ நடிகை நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் ஆகும் நோக்கத்தில் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறீர்களா.? என்பது போல கேள்வி கேட்கப்பட்டது.
இதையும் படியுங்களேன்- வாய்ப்பு இல்லாததால் தாராள கவர்ச்சி… அந்த மாதிரி தொடரில் அசால்ட்டாக நடித்த அஞ்சலி.!
இந்த கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஏங்க இது என்ன வம்பா இருக்கு..? நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. எப்பவுமே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான். கதாநாயகன் இல்லாமல் படம் வேண்டாம் என்று நான் முடிவு செய்துநடிக்கவில்லை. நல்ல கதையம்சம் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இந்த மாதிரியான கதைகள் அமைவதால் தொடர்ந்து அவ்வாறு நடித்து வருகிறேன். லேடி சூப்பர்ஸ்டார் ஆகனும் என்கிற பிளானுடன் நான் அப்படி செய்யவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை’ என பதில் அளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…