இந்த மாதிரி கேள்வி கேட்டு ஏன் உயிரை வாங்குறீங்க..? செம கடுப்பான ஓவியா.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை ஓவியா 31 வயதாகியும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அவர் ஏதேனும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தாலோ அல்லது சமூக வலைத்தளத்தில் நேரலை வந்தாலோ திருமணம் எப்போது..? என்ற கேள்வியை ரசிகர்கள் அல்லது நெட்டிசன்கள் கேட்டு விடுவார்கள்.
அந்த வகையில்,இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்யும் போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம்..? என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு பதில் நடிகை ஓவியா சற்று காட்டத்துடன் பதில் அளித்துள்ளார்.
திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஓவியா ” எப்போதும் இதே கேள்வியை கேட்கறீர்கள்..? நான் திருமணம் செய்துகொள்ளப்போவதே இல்லை. என் இந்த மாதிரி கேள்வியை என்னிடம் கேட்டு உயிரை வாங்குறீங்க” என பதில் அளித்துள்ளார். அவர் பேசும் வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் நடிகை ஓவியா தற்போது “பூமர் அங்கிள்” எனும் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இன்னும் சில நாட்களில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.