சித் ஸ்ரீராமின் இசை மழையில் நனைய தயாரா.? டிக்கெட் விற்பனை இன்று முதல்….

Published by
பால முருகன்

சித் ஸ்ரீராம் : பிரபல பாடகரான சித் ஸ்ரீராம் நீ சிங்கம் தான் என்ற பெயரில் வரும் 22-ஆம் தேதி சென்னையில் இசைநிகழ்ச்சி நடத்துகிறார். அந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

பாடகர் சித் ஸ்ரீராம் குரலுக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு மனதை மயக்கும் பல பாடல்களை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடி இருக்கிறார். இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பாடகராக இருக்கும் சித் ஸ்ரீராம் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். முதன் முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘கடல்’  படத்தில் இடம்பெற்ற “அடியே”  பாடலை பாடி தான் பாடகராக அறிமுகம் ஆனார்.

இந்த பாடலை தொடர்ந்து அனிருத் இசையில் ‘என்னை மற்றும் காதலே’ , சந்தோஷ் தயாநிதி இசையில் ‘ஹே பென்னே’ , யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘ஹை ஆன் லவ்’ , டி இமான் இசையில் ‘குரும்பா’, இளையராஜா இசையில் ‘உன்ன நெனச்சு’ உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடல்களை பாடி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.

பலரும், இவருடைய குரலுக்கு ரசிகர்களாக இருக்கும் நிலையில், இப்படியான ரசிகர்களை மகிழ்விக்க சித் ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்த இருக்கிறார். அந்த இசைக்கச்சேரியை Fever FM (91.9) நிறுவனத்தின் ஒரு சார்பு நிறுவனமான பிவேர் லைவ் (Fever Live)  நிறுவனம் தான் தயாரிக்கிறது.  “நீ சிங்கம் தான்” என்ற பெயரில் வரும் ஜூன் 22-ஆம் தேதி சென்னையில் உள்ள YMCA மைதானத்தில் பிரமாண்டமாக இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஜூன் 22-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கப்படவுள்ள இந்த இசை நிகழ்ச்சியில் சித் ஸ்ரீராம் பாடிய பல ஹிட் பாடல்களும் பாட இருக்கிறது.  இந்த இசை நிகழ்ச்சி பற்றி நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் கூறியதாவது ” வரும் 22-ஆம் தேதி நீ சிங்கம் தான் இசை நிகழ்ச்சியில் சித் ஸ்ரீராம் தனது சொந்த ஊரில் மேடையில் ஏறி பாடும் போது அவரது மயக்கும் குரலை கேட்டு மகிழ்வதற்கு தயாராகுங்கள்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு சித் ஸ்ரீராம் தனது சொந்த ஊரில் மேடை ஏறுவதால், வரவிருக்கும் நேரடி நிகழ்வு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானால் தொடங்கிய சித் ஸ்ரீராம் இசைப் பயணம், அவரது தனித்துவமான குரல் திறமை அவரது அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் பரவியிருக்கும் ஒரு திறமையுடன், சித்தின் இசை எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் எதிரொலிக்கிறது.

நிகழ்ச்சி நடக்கவுள்ள நாள் நெருங்கி இருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்டுகள் தற்பொழுது விற்பனைக்கு வந்திருக்கிறது. எனவே, இசை நிகழ்ச்சியை பார்க்க விருப்பம் இருபவர்கள் “Book My Show” மற்றும் Paytm Insider உள்ளிட்ட இணையதளங்களுக்கு சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொண்டு நிகழ்ச்சியை நேரில் கண்டு மகிழுங்கள்.

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

4 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

5 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

6 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

7 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

7 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

7 hours ago