சித் ஸ்ரீராமின் இசை மழையில் நனைய தயாரா.? டிக்கெட் விற்பனை இன்று முதல்….
சித் ஸ்ரீராம் : பிரபல பாடகரான சித் ஸ்ரீராம் நீ சிங்கம் தான் என்ற பெயரில் வரும் 22-ஆம் தேதி சென்னையில் இசைநிகழ்ச்சி நடத்துகிறார். அந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
பாடகர் சித் ஸ்ரீராம் குரலுக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு மனதை மயக்கும் பல பாடல்களை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடி இருக்கிறார். இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பாடகராக இருக்கும் சித் ஸ்ரீராம் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். முதன் முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘கடல்’ படத்தில் இடம்பெற்ற “அடியே” பாடலை பாடி தான் பாடகராக அறிமுகம் ஆனார்.
இந்த பாடலை தொடர்ந்து அனிருத் இசையில் ‘என்னை மற்றும் காதலே’ , சந்தோஷ் தயாநிதி இசையில் ‘ஹே பென்னே’ , யுவன் ஷங்கர் ராஜா இசையில் ‘ஹை ஆன் லவ்’ , டி இமான் இசையில் ‘குரும்பா’, இளையராஜா இசையில் ‘உன்ன நெனச்சு’ உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடல்களை பாடி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.
பலரும், இவருடைய குரலுக்கு ரசிகர்களாக இருக்கும் நிலையில், இப்படியான ரசிகர்களை மகிழ்விக்க சித் ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்த இருக்கிறார். அந்த இசைக்கச்சேரியை Fever FM (91.9) நிறுவனத்தின் ஒரு சார்பு நிறுவனமான பிவேர் லைவ் (Fever Live) நிறுவனம் தான் தயாரிக்கிறது. “நீ சிங்கம் தான்” என்ற பெயரில் வரும் ஜூன் 22-ஆம் தேதி சென்னையில் உள்ள YMCA மைதானத்தில் பிரமாண்டமாக இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஜூன் 22-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கப்படவுள்ள இந்த இசை நிகழ்ச்சியில் சித் ஸ்ரீராம் பாடிய பல ஹிட் பாடல்களும் பாட இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சி பற்றி நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் கூறியதாவது ” வரும் 22-ஆம் தேதி நீ சிங்கம் தான் இசை நிகழ்ச்சியில் சித் ஸ்ரீராம் தனது சொந்த ஊரில் மேடையில் ஏறி பாடும் போது அவரது மயக்கும் குரலை கேட்டு மகிழ்வதற்கு தயாராகுங்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு சித் ஸ்ரீராம் தனது சொந்த ஊரில் மேடை ஏறுவதால், வரவிருக்கும் நேரடி நிகழ்வு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானால் தொடங்கிய சித் ஸ்ரீராம் இசைப் பயணம், அவரது தனித்துவமான குரல் திறமை அவரது அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் பரவியிருக்கும் ஒரு திறமையுடன், சித்தின் இசை எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் எதிரொலிக்கிறது.
நிகழ்ச்சி நடக்கவுள்ள நாள் நெருங்கி இருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்டுகள் தற்பொழுது விற்பனைக்கு வந்திருக்கிறது. எனவே, இசை நிகழ்ச்சியை பார்க்க விருப்பம் இருபவர்கள் “Book My Show” மற்றும் Paytm Insider உள்ளிட்ட இணையதளங்களுக்கு சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொண்டு நிகழ்ச்சியை நேரில் கண்டு மகிழுங்கள்.