நீங்க மணவாளனா? மன' வாளனா? ரசிகரின் கேள்விக்கு பார்த்திபனின் அட்டகாசமான ட்வீட்!
பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநரும், நடிகருமாவார். இவ்வாறு பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன், தனி ஆளாகவே, அனைத்து கதாபாத்திரங்களையும் தனக்குள் கொண்டு, நடித்துள்ள திரைப்படம் ஒத்த செருப்பு. இப்படத்தின், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என அனைத்து வேலைகளையும் பார்த்திபன் மட்டுமே செய்துள்ளார்.
இதனையடுத்து, இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலன்கள் என அனைவருமே தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகினறனர்.
இந்நிலையில், மணவாளன் என்கின்ற ரசிகர் ஒருவர், ‘நம்ம வீட்டு பிள்ளை ல நாப்பது பேரு இருக்காங்க ஒருத்த காதபத்திரமும் மனசுல நிக்கல ஆனா ஒரே ஒரு ஆள் தான் இருக்காரு ஆனா நாப்பது பேரு கண்ணு முன்னாடி வந்து போறாங்க’ என கமெண்ட் செய்துள்ளார்.
இதற்கு தனது பாணியில் பதிலளித்த பார்த்திபன், ‘நீங்க மணவாளனா? மன’வாளனா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
நீங்க மணவாளனா?
மன’வாளனா? https://t.co/LmOp2OCQJO— R.Parthiban (@rparthiepan) September 30, 2019