மேயாத மான் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் ரத்னகுமார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் சந்தானத்தை வைத்து ‘குளு குளு’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் சரியான வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு அவர் எந்த படத்தையும் இன்னும் இயக்காமல் இருக்கிறார்.
ரத்னகுமார் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களுக்கு வசனம் எழுத எழுத்தாளராக பணியாற்றி இருந்தார். தொடர்ச்சியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களுக்கு இணை இயக்குனராக ரத்னகுமார் தான் எழுத்தாளராக பணியாற்றியும் வருகிறார். இதனையடுத்து லோகேஷ் அடுத்ததாக ரஜினியின் 171-வது திரைப்படத்தை இயக்க கமிட் ஆகி இருக்கிறார்.
தற்காலிகமாக அந்த படத்துக்கு “தலைவர் 171” என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திலும் எழுத்தாளராக ரத்னகுமார் பணியாற்றுவாரா என்ற கேள்வி திடீரென கிளம்பி இருக்கிறது. ஏனென்றால், லியோ படத்தின் வெற்றி விழாவில் ரத்னகுமார் எவ்வளவு உயர பறந்தாலும் பசி எடுத்து என்றால் கீழே இறங்கி தான் ஆகவேண்டும் என ரஜினி கூறிய காக்க- கழுகு கதைக்கு பதில் கூறும் வகையில் பேசி இருந்தார்.
ரத்னகுமார் இப்படி பேசியவுடன் ரஜினி ரசிகர்கள் அனைவரும் ரத்னகுமாரை திட்ட தொடங்கினார்கள். இதனையடுத்து, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரத்னகுமாரிடம் நீங்கள் தலைவர் 171 படத்தில் இருக்குறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்க்கு பதில் கூறிய ரத்னகுமார் ” படத்தின் தலைப்பு அறிவிக்கும் வரை என்னுடைய பெயர் இருப்பதாக வெளியே அறிவிப்பு வராது.
நான் இந்த திரைப்படத்தில் இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு ஏனென்றால், நான் அடுத்தாக ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறேன். தற்போது அதற்கான வேளைகளில் தான் ஈடுபட்டு வருகிறேன். அந்த படத்தின் கதை லோகேஷ் கனகராஜுடையது. அந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் தயாரிக்கவும் செய்கிறார்” என கூறியுள்ளார். இதன் மூலம் தலைவர் 171 படத்தில் ரத்னகுமார் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…