‘மிஷ்கின் என்ன பெரிய அப்பாடக்கரா… நாகரிகமாக பேச தெரியாதா?’ – அருள்தாஸ் விளாசல்!

இயக்குநர் மிஷ்கின் அண்மையில் படவிழாவில் பேசுகையில், தாம் ஒரு குடிகாரன், மற்றவர்களை விட அதிகம் குடிப்பேன் என காரசாரமாக பேசியிருந்தார்.

mysskin - Aruldoss

சென்னை : சென்னையில் கடந்த சனிக்கிழமை (18.01.2024) நடைபெற்ற “Bottle Radha” இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் மிஸ்கின் மேடையில், மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி பேசியிருப்பதோடு, “ஒரு குவார்ட்டர் அடித்து விட்டு படம் பார்க்க வா, இல்லேன்னா படம் பார்த்துட்டு போய் ஒரு குவார்ட்டர் அடி” என குடியை ஊக்குவிக்கும் வகையில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த விழா மேடையில் சிறப்பு அழைப்பாளர்களாகவும், மேடைக்கு முன் பார்வையாளர்களாகவும் பெண்கள் பலர் கலந்து கொண்டிருந்த போதும் கூட அதே மேடையில் அமர்ந்திருந்த வெற்றிமாறன், பா.ரஞ்சித், லிங்குசாமி, அமீர் போன்ற முன்னணி இயக்குனர்களும், இயக்குனர் மிஸ்கின் சபை நாகரீகமற்ற அருவருப்பான ஆபாசமாக பேசிக்கொண்டிருப்பதை தடுக்காமல் கைதட்டி, சிரித்து ரசித்துக் கொண்டிருந்ததை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

தற்பொழுது, இந்த பேச்சு சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், திரையுலகினர் அடுத்தடுத்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகரான அருள் தாஸ், இயக்குநர் மிஷ்கினை நோக்கி நீ என்ன பெரிய அப்பாடக்கரா? மேடையில் நாகரிகமாக பேச தெரியாதா? என விளாசியுள்ளார்.

இது குறித்து 2K லவ் ஸ்டோரி திரைப்பட விழாவில் பேசிய  நடிகர் அருள் தாஸ், “மேடையில் மிஷ்கின் பேசியது அவ்வளவு ஆபாசமாக இருந்தது. இயக்குநராக இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசகூடாது.

உலக படங்கள் பார்த்திருக்கிறேன், புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்கிறீர்கள். நாகரீகம் வேண்டுமா? அனைவரையும் வாடா, போடா என்று அழைக்கிறார். சினிமாவில் நீங்கள் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? நீங்கள் ஒரு போலி அறிவாளி. அவர் பேசிய மேடை எனக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது” என்று கேள்விகளை எழுப்பி பொங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்