விடுதலை படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா..? சென்சார் சான்றிதழ் இதோ.!
சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை- 1 திரைப்படம் வரும் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், விடுதலை படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
#ViduthalaiPart1 Censor cut list pic.twitter.com/WpydPr5Pr7
— Karthik Ravivarma (@Karthikravivarm) March 27, 2023
சென்சார் போர்டு அதிகாரிகள் விடுதலை படத்தில் இடம்பெற்ற பல கெட்டவார்த்தைகளை கட் செய்துள்ளனர். அது மேற்கண்ட சென்சார் தாளில் பார்க்கையில் உங்களுக்கே தெரியும். அந்த அளவிற்கு படத்தில் பல கெட்டவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. அது அத்தனத்தையும், அதிகரிகள் கட் செய்துள்ளனர்.
மேலும், விடுதலை படத்திற்கு சென்சாரில் அதிகாரிகள் ‘A’ சான்றிதழ் கொடுத்திருந்தார்கள். எனவே, படத்தை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.