நண்பர்களாக இருந்த ரெஜினா -சாய் தரம் தேஜ் தற்போது காதலர்களா?
ரெஜினா பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் உடன் “பில்லா நுவ்வு லேனி ஜீவிதம்” படத்தில் நடித்தார்.இப்படம் நடிகர் சாய் தரம் தேஜ்க்கு முதல் படமாகும்.
நடிகை ரெஜினா “கண்ட நாள் முதல் ” திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் நடித்த “கேடி பில்லா கில்லாடி” , “மாநகரம் ” , “சரணவன் இருக்க பயமேன் ” ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சமீப காலமாக இவர் நடிக்கும் படங்களில் அதிக கவர்ச்சி உடன் நடித்து வருகிறார். இதனால் இவருக்கு இளைஞர்கள் பலர் ரசிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில் ரெஜினா பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் உடன் “பில்லா நுவ்வு லேனி ஜீவிதம்” படத்தில் நடித்தார்.இப்படம் நடிகர் சாய் தரம் தேஜ்க்கு முதல் படமாகும்.
இப்படத்தில் இருந்து இருவரும் பல வருடங்களுக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகின்றனர்.தற்போது இவர்களின் நட்பு காதலாக மாறியிருப்பதாக கிசு கிசு தகவல் பரவி வருகிறது. ஆனால் இருவரும் காதலிக்கவில்லை என மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.