Ajith Kumar and Arav [file image]
நடிகர் அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்புக்காக அஜித் விமானம் மூலம் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று இருந்தார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது படத்தில் ஒவ்வொரு பிரபலங்களும் வரிசையாக இணைந்து வருகிறார்கள். அதிகாரப்பூர்வமாக படத்தில் இணையும் பிரபலங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை என்றாலும் கூட தகவல்களாக அவபோது புகைப்படங்கள் மட்டும் வெளியாகி கொண்டு படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் தெரிய வந்துகொண்டு இருக்கிறது.
விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா.! அதுக்கு ஏன் இவ்வளவு சீனு?
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பதெல்லாம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து தான் ரசிகர்களுக்கு தெரியவந்தது. இந்த நிலையில் அதனை தொடர்ந்து தற்போது தான் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக பிக் பாஸ் பிரபலம் ஆரவ் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார்.
நடிகர் அஜித்துடன் அஜர்பைஜான் நாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஆரவ் ” இந்த தருணத்திற்காக 20 வருடங்கள் காத்திருந்தேன். தல விடாமுயற்சி என்றும் தோற்காது” என கூறியுள்ளார். ஏற்கனவே நடிகர் ஆரவ் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான கழக தலைவன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் இரண்டாவது முறையாக விடாமுயற்சி படத்தின் மூலம் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…