Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பெரிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து லால் சலாம், சிங்கப்பூர் சலூன், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருந்தது.
அதன்பிறகு மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகி ஹிட் ஆகவில்லை. அந்த சமயத்தில் மலையாள சினிமாவில் இருந்து வெளியான படங்கள் தான் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக்கொண்டு வந்தது. இந்த சூழலில் மீண்டும் தமிழ் சினிமா கம்பேக் கொடுக்கும் வகையில், சுந்தர் சி இயக்கத்தில் இன்று வெளியான அரண்மனை 4 படம் அமைந்துள்ளது.
ஏற்கனவே அரண்மனை 3 பாகங்களை சுந்தர் சி எடுத்து இருந்த நிலையில், அவர் அரண்மனை 4 படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ராஷி கண்ணா, தமன்னா, யோகி பாபு, கோவை சரளா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து இருக்கிறார்.
இந்த படத்திற்கான ட்ரைலர் ஏலம் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில், படம் இன்று (மே 3)-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருப்பதன் காரணத்தால் படத்தை பார்த்துவிட்டு மக்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். கோடை விடுமுறையில் படம் வெளியாகி இருப்பதால் கண்டிப்பாக கண்டிப்பாக கோடை விடுமுறையில் மக்கள் குடும்பத்துடன் சென்று கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் அரண்மனை 4 கண்டிப்பாக பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமையும் அந்த அளவுக்கு குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறி வருகிறார்கள்.
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…
சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில்…