சென்னை : அரண்மனை 4 திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் அமைந்தது என்றே கூறலாம். அதற்கு உதாரணம் என்றால் படத்தின் வசூல் தான். சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே 3-ஆம் தேதி வெளியான இந்த படம் பலத்த வரவேற்பை பெற்று இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா, தமன்னா, யோகி பாபு, கோவை சரளா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து இருக்கிறார். படம் குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்களை வெகுவாக கவர்ந்த காரணத்தால் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கிறது.
படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்பதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து இருக்கிறது. அதன்படி, படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாகவும் இந்த படம் மாறியுள்ளது.
கிட்டத்தட்ட 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடி வசூலை கொடுத்து பெரிய அளவில் லாபத்தை கொடுத்துள்ள காரணத்தால் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்னுமே பல திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டு இருப்பதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னுமே அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…