ஓடிடியில் மிரட்ட வருகிறது அரண்மனை 4! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அரண்மனை 4 : சுந்தர் சி இயக்கத்தில் ராஷி கண்ணா, தமன்னா பாட்டியா, சுந்தர் சி, சந்தோஷ் பிரதாப், தேவா நந்தா, யோகி பாபு, டெல்லி கணேஷ், மொட்ட ராஜேந்திரன், விடிவி கணேஷ், லொள்ளு சபா சேசு, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலருடைய நடிப்பில் கடந்த மே 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அரண்மனை 4’.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம். 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கிறது.
படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து இருந்தார்கள். இதனையடுத்து, அவர்களுக்காகவே படம் எந்த ஓடிடியில் வெளியாகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, அரண்மனை 4 திரைப்படம் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் படத்திற்கான, ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை, இருப்பினும், படம் இந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதிகுள் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படம் எந்த தேதியில் ஓடிடியில் வெளியாகும் என்ற ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.