sundar c [file image]
சுந்தர் சி : அரண்மனை 4 படம் பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக பெரிய ஹீரோவை வைத்து படம் எடுக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான அரண்மனை 4 படம் குடும்ப ரசிகர்கள் கொண்டாடி மிக்பெரிய ஹிட் பட்டியலில் இணைந்துள்ளது. 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி அடுத்ததாக எந்த படத்தை இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.
இதனையடுத்து, அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து கலகலப்பு 3 படத்தை சுந்தர் சி இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும், படத்தில் நடிகை வாணி போஜன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை இயக்கவில்லையாம்.
அரண்மனை எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்து இருக்கிறோம் கண்டிப்பாக பெரிய நடிகர்களிடம் இருந்து தனக்கு போன் வரும் என்றும், அடுத்ததாக இயக்கினால் பெரிய ஹீரோவிடம் கால்ஷீட் வாங்கி பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம். எந்த ஹீரோவும் கால் செய்யவில்லை என்றால் கூட சுந்தர் பெரிய ஹீரோ ஒருவரை தேர்வு செய்து அந்த ஹீரோவிடம் கதை சொல்லி ஒரு படம் இயக்க இருக்கிறாராம்.
வழக்கமாக ஒரு ஹிட் படத்தை கொடுத்தால் சுந்தர் சி வெளியே குடும்பத்துடன் சுற்றுலா செல்வது வழக்கமாம் அப்படி தான் தற்போது சுற்றுலாவுக்கு சென்று இருக்கிறாராம். அங்கு சென்று திரும்பிய பிறகு பெரிய ஹீரோ ஒருவருக்கு கால் செய்ய திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. மேலும், சுந்தர் சி முன்னதாக ஒரு பேட்டியில் அடுத்ததாக தான் கலகலப்பு 3 படத்தை இயக்கும் வேளைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…