லால் சலாம் படத்தில் ஏன் இதை செய்தேன்.? வீடியோ மூலம் விளக்கம் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.!

A. R. Rahman

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த லால் சலாம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ பாடலை மறைந்த பாடகர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் 2022 ஆம் ஆண்டு மறைந்த பம்பா பாக்கியா ஆகிய பாடகர்களுடைய குரலை ஏஐ வைத்து ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கி இருந்ததாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

திருமணம் எப்போ? நச் பதில் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!

இந்த தகவல் வெளியான பிறகு அனுமதி இல்லாமல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடைய குரலை பயன்படுத்தியதாக பேசப்பட்டது. பின் இதற்கு பதில் அளித்த ரஹ்மான் ” பாடகர்கள் பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீது ஆகியோருடைய குடும்பத்தை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று அவர்களுக்கு சன்மானம் கொடுத்த பிறகு தான் அவர்களுடைய குரலை ஏஐ வைத்து உருவாக்கினோம் தொழில்நுட்பம் முறையாக பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் இருக்காது” என விளக்கம் கொடுத்து இருந்தார்.

இந்நிலையில், அதனை தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானிடம் மீண்டும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவரும் மனம் திறந்து பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனது நண்பர்களான ஷாஹுல் ஹமீத் மற்றும் பம்பா பாக்யா ஆகிய இருவருடைய குரல் மீண்டும் அழைத்து வர தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முயற்சித்தேன்.

அதற்கு நான் முதலில் குடும்பத்தினரிடம் சென்று அனுமதி கேட்டோம். அவர்கள் எதுவுமே சொல்லாமல் முழு மனதுடன் அனுமதி கொடுத்தார்கள்.  பின் ‘லால் சலாம்’ பாடலுக்காக மறைந்த பாடகர்களின் குரல்களை மீண்டும் உருவாக்க AI பயன்படுத்தினோம்” எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்