A.R.Rahman : ஷங்கர் படத்திற்கு இசையமைப்பது கடினமான விஷயம் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்தினம் இயக்குனர் ஷங்கர் ஆகியோருடைய கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதனை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. இயக்குனரி மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று விடும்.
அதனை போலவே, ஷங்கருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கைகோர்க்கும் போதும் அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் பிரமாண்டமாக இருக்கும். இப்படியான சூழலில் இயக்குனர் மணிரத்னம் படத்திற்கு இசையமைப்பது கடினமா அல்லது ஷங்கர் படத்திற்கு இசையமைப்பது கடினமா என்ற கேள்வி சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டுள்ளது.
அந்த கேள்விக்கு பதில் பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் ” சங்கர் சார் படத்திற்கு மியூசிக் பண்ணத்தான்ரொம்பவே கடினமாக இருக்கும். மணிரத்தினம் படம் என்றால் இசையமைக்கும்போது ஒரு மாதிரி ஜாலியாக சென்று கொண்டு இருக்கும். ஆனால், ஷங்கர் சார் படத்திற்கு இசையமைக்கும்போது ஒரு அளவு வைத்து இருப்பார்.
இந்த அளவுக்கு தான் எனக்கு ஒரு பாட்டு வேண்டும் என்று எனக்கு கட்டளை போடுவார். அது நல்லது தான். நான் மட்டுமில்லை பாடல்களுக்கு வரி எழுதும் போது பாடலாசிரியர்களும் கஷ்டப்படுவார்கள். ஊர்வசி பாடல் எல்லாம் கிட்டத்தட்ட ஒரு 4 மாதங்களுக்கு மேல் எழுதப்பட்டது. தினமும் அமர்ந்து யோசித்து கொண்டு இருப்போம். சில பாடல்கள் சீக்கிரமாக வந்துவிடும். ஆனால், பல மெனக்கெடல் நடக்கும் இதெல்லாம் செய்து தான் ஷங்கர் பாடல் வெளியாகும்” எனவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…