தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இயக்குனர் பாரதி ராஜா, நடிகர்கள் விக்ரம், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.
அந்த வகையில், பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது ” அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி ” என கூறியுள்ளார்.
விஜயகாந்த் மறைவு…சினிமா பிரபலங்கள் இரங்கல்!
மேலும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜயகாந்தை வைத்து ரமணா எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஜயகாந்த் மறைவுக்கு இரங்கலை தெரிவித்ததோடு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் “ரமணா படம் உருவாவதற்கு முக்கிய காரணமே விஜயகாந்த் தான். அவர் கொடுத்த அந்த நம்பிக்கை தான் என்னை அந்த படத்தை முடித்து கொடுக்க உறுதுணையாக இருந்தது” எனவும் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…