விஜய் ரசிகர் மன்றத்தில் கூட இணைவோமே தவிர உங்கள் கட்சிக்கு ஒரு போதும் வரமாட்டோம் – அஜித் ரசிகர்கள்!!!
அஜித் நடித்த படம் ‘ விஸ்வாசம் ‘ பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. தற்போது இந்த படம் திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரசிகர்கள் இந்த படம் வந்த நாளை திருவிழாவாக கொண்டாடினர்.
இந்நிலையில் தமிழக பாஜக கட்சியில் உள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் ஒரு பேட்டி ஒன்றை தற்போது அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர்கூறியதாவது, ‘ தமிழகத்தில் பிஜேபி அஜித் ரசிகர்களால் தான் முன்னேறும்’ என்று கூறியுள்ளார்.
இதற்கு அஜித் ரசிகர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒரு ரசிகர் தற்போது ‘நாங்கள் விஜய் ரசிகர் மன்றத்தில் கூட இணைவோமே தவிர , உங்கள் கட்சிக்கு ஒரு போதும் வரமாட்டோம்’ என அவரது வலைதள பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.