அட்டர் பிளாப் ஆன ‘அயோக்யா’! பொறுப்பை ஏற்று கொண்டு பணத்தை கொடுத்த விஷால்!
இயக்குனர் வெங்கட் மோகன் எழுதி இயக்கி விஷால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைபடம் “அயோக்யா”. இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா ,கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், ஆனந்தராஜ், யோகி பாபு, சோனியா அகர்வால், தேவதர்ஷினி, வேல ராமமூர்த்தி , அபூர்வா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தை 2019-ஆம் ஆண்டு பொங்கல் வார இறுதியில் அதாவது ஜனவரி 11 -ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், சில பிரச்சனை காரணமாக அதே ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இருக்கைகளை சேதபடுத்தியதன் எதிரொலி? ரோஹிணி திரையரங்கில் ‘லியோ’ படம் திரையிடபடாது!
பட்ஜெட் மற்றும் பண பிரச்சனை காரணமாக படம் வெளியாக தாமதமானதாக கூறப்படுகிறது. இந்த படத்தை எடுத்து தெலுங்கு தயாரிப்பாளர் எனவே, பண பிரச்சனை காரணமாகவே படம் வெளியாகாமல் இருந்தது படம் வெளியாகவில்லை என்ற காரணத்தால் படத்தின் மீது விஷாலும் ஆர்வம் காட்டவில்லையாம். பிறகு தயாரிப்பாளர் ரவீந்திரன் தான் விஷாலையும், “அயோக்யா” படத்தின் தயாரிப்பாளரையும் நேரில் அழைத்து பேசினாராம்.
முதலில் “அயோக்யா” படத்தின் தயாரிப்பாளர் மதுவை நேரத்தில் அழைத்து இந்த படத்தை நீங்கள் ரிலீஸ் செய்யவில்லை என்றால் உங்களுக்கு பண ரீதியாக இன்னும் அடி விழும் அதைப்போல விஷாலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே படம் ஓடுதோ ஓடவில்லையோ ரிலீஸ் செய்துவிடுவோம் என கூறினாராம்.
அதைப்போலவே தான் விஷாலையும் நேரில் அழைத்து படத்தை ரிலீஸ் செய்வோம் என்று கூற முதலில் விஷால் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். பிறகு எப்படியோ பேசி தயாரிப்பாளர் ரவீந்திரன் விஷாலை சம்மதம் தெரிவிக்க வைத்துவிட்டாராம். பிறகு நடிகர் விஷால் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 1 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்தாராம். இந்த தகவலை தயாரிப்பாளர் ரவீந்திரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், 1 கோடி கொடுத்து விஷால் இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்திருந்தாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை தான் சந்தித்தது. படத்தில் பல பிரபலங்கள் நடித்திருந்த காரணத்தால் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது ஆனால், அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.