சென்னை : சினிமாவில் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி வெளிப்படையாகவே பேசிவிடுவது உண்டு. மேலும், சிலர் பேட்டிகளில் பேட்டி கொடுக்க வரும் போது இது போன்ற கேள்விகள் கேட்டால் அதற்கு தன்னுடைய கருத்துக்களையும் தெரிவித்துவிடுவார்கள். மேலும், சிலர் இது போன்ற கேள்விகளை என்னிடம் கேட்கவேண்டாம் என்று கோபமடைந்துவிடுவார்கள்.
அப்படி தான் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேள்விக்கு நடிகை பிரியா பவானி சங்கர் மிகவும் கடுப்பாகி இருக்கிறார். எங்கே சென்றாலும் இது போன்ற கேள்விகளை கேட்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து சென்னையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் பேசிய அவர் ” முதலில் எனக்கு இந்த மாதிரி கேள்விகளை கேட்டாலே ரொம்பவே கோபமாக வருகிறது.
நான் எந்த ஊடகத்திற்கு பேட்டி கொடுக்க சென்றாலும் என்னிடம் கேட்கும் கேள்வி உங்களிடம் யாரும் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு இருக்கீறார்களா? உங்களுக்கு இந்த பிரச்சனை நடந்து இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். முதலில் இந்த கேள்வியை எதற்காக நடிகைகளிடம் கேட்கறீர்கள்? இதே கேள்வியை நடிகரிடம் கேட்பீர்களா? கண்டிப்பாக கேட்க மாட்டிங்க.
எனவே, ஒரு நடிகை கிட்ட மட்டும் எதற்காக அந்த மாதிரி கேள்வியை கேட்கிறீர்கள் என்று எனக்கு நிஜமாகவே தெரியவில்லை. அதைப்போல, நாம் எப்படி இருந்தாலும் எல்லாரும் குறை என்பது சொல்லி கொண்டே தான் இருப்பார்கள். நான் ஒரு இடத்திற்கு செல்கிறேன் என்றால் நான் போட்டிருக்கும் ட்ரஸ் சரியாக இல்லை என என்னுடைய தோழியே சொல்வார்கள்.
அவர்கள் சொல்வதை பற்றி நான் யோசித்துக்கொண்டு சரி அவர்கள் சொல்கிறார்கள் என்பதை எடுத்துக்கொள்வேன். ஆனால் அதற்காக எல்லாம் என்னை மாற்றி கொள்ளவே மாட்டேன். எனக்கு இது போன்ற விஷயங்கள் எல்லாம் பிரச்சனை இல்லை. ஆனால், அட்ஜஸ்ட்மென்ட் பற்றி யாரும் கேட்காதீர்கள் என்கிறார் பிரியா பவானி சங்கர்.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…