சினிமாத்துறையில் இருக்கும் நடிகைகள் பற்றி வதந்தியான தகவல்கள் பரவுவது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. எப்போதும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்கை குறித்தும் அவர்கள் குறித்தும் வதந்தியான தகவல் பரவுவது உண்டு. அந்த வகையில் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை அனுயா குறித்து வதந்தியான தகவல் ஒன்று பரவியது.
அது என்னவென்றால், நடிகை அனுயா பிரபலங்கள் பலருடன் உறவில் இருப்பதாகவும், அவர்களுடன் அனுயா டேட்டிங் செய்து வருவதாகவும், இதனால் தான் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த செய்தி உண்மையா இல்லையா என ரசிகர்கள் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கு நடிகை அனுயா விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர் பேசியது ” எனக்கு கொஞ்சம் தான் தமிழ் தெரியும் நான் துபாயில் பிறந்து வளர்ந்தவர். என்னுடைய அப்பா அம்மா இரண்டு பெரும் டாக்ட்டர்கள். என்னோட உடன் பிறந்த அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறார். என்னை பற்றி என்னுடைய தனிப்பட்ட வாழ்கை பற்றி பரவும் செய்திகள் அனைத்தும் பொய்யான தகவல். நான் பிரபலங்களுடன் உறவில் இருப்பதாக செய்திகள் வெளியானதை நான் பார்த்தேன்.
லேடி சூப்பர் ஸ்டார்னு கூப்பிடாதீங்க! நடிகை நயன்தாரா வேண்டுகோள்!
குறிப்பாக விஜய் ஆண்டனி, சுந்தர் சி, ஜீவா ஆகியோருடன் நான் உறவில் இருந்ததாக செய்திகள் வெளியானது. இந்த தகவலை நான் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த தகவலில் கொஞ்சம் கூட உண்மையில்லை. நான் இப்போது சிங்கிளாக தான் இருக்கிறேன்” என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதனை தொடர்ந்து நெட்டிசன் ஒருவர் இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கும் பதில் அளித்த நடிகை அனுயா ” என்னை சுற்றி இருக்கும் ஆண்கள் யாரும் நல்லவர்கள் இல்லை எனவே நான் அதன் காரணமாக தான் திருமணம் செய்து கொள்ளவில்லை” எனவும் பதில் அளித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…