Anushka Shetty
அனுஷ்கா : தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா முதன் முதலாக நாகார்ஜூனா நடிப்பில் வெளியான சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் தான் அறிமுகமானார். இந்த படத்தில் நடிக்கவே அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்தது பிரபல நடிகரான சோனு சூட் மூலம் தானாம். இந்த தகவலை நடிகர் சோனு சூட் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
மும்பையில் உள்ள ஒரு ஜிம்மில் அனுஷ்காவும், சோனு ஷூட்டும் உடற்பயிற்சி செய்து வந்தார்களாம். அந்த சமயம் ஏற்கனவே, சினிமாவில் சோனு ஷூட் கலக்கி கொண்டு இருந்த நிலையில், அவருக்கு பூரி ஜெகன்நாத்துடன் நல்ல பழக்கம் இருந்த காரணத்தால் நாகார்ஜூனாவை வைத்து சூப்பர் படம் எடுக்கும்போது அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு சோனு சூட்க்கு வந்ததாம்.
ஹீரோயினுக்கு புது கலைஞரை தேடி வருகிறோம் என்று படக்குழுவினர் கூறினார்களாம். அதன்பிறகு அனுஷ்காவை பற்றி அவர்களிடம் சோனு சூட் கூறினாராம். உண்மையில் அதுவரை நான் அனுஷ்காவிடம் பேசவே இல்லையாம் ஜிம்முக்கு வரும் போது பார்த்தால் சிரிப்பது என இருவரும் இருந்தார்களாம். அந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று உணர்ந்து படக்குழுவிடம் அனுஷ்கா பெயரை சோனு சூட் கூறினாராம்.
உடல் எடை பிரச்சனை காரணமாக சினிமா துறையில் இருந்து ஒதுங்கி இருந்த அனுஷ்கா மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவரது கடைசி படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி. இந்தப் படத்தின் மூலம் ரீ எண்டரி கொடுத்தார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…