ரசிகர்கள் மூலம் ஆண்டு தோறும் கண் அறுவை சிகிச்சை! பிரபல நடிகர் ஓபன் டாக்!
நடிகர் சியான் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள அணைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், விக்ரம், சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் கண் மருத்துவமனையின் கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ரசிகர் மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் இலவச கண் அறுவை சிகிச்சை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.