PARKING Movie Ott [File Image]
இந்த ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளியான பல படங்களில் சில படங்கள் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அதில் ஒரு திரைப்படம் தான் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் ஒன்று. இந்த பார்க்கிங் திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார்.
படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ராம ராஜேந்திரன், பிராத்தனா நாதன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது.
மனதை கவர வரும் யுவனின் இசை! கார்த்தி – தமன்னாவின் அழகிய காதல்.. பையா ரீ-ரிலீஸ்….
கார் ஒன்றை வீட்டிற்கு முன்பு நிறுத்தற்காக ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 2 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்துள்ளனர்.
அப்படி காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது பார்க்கிங் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, பார்க்கிங் திரைப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறிய மக்கள் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி ஓடிடியில் பார்க்கலாம்.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…