சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் அறிவிப்பு..!

Published by
பால முருகன்

இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன் , லிஜோமொள் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் “ஜெய் பீம்”. இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இப்படம் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த விமர்சனத்தை பெற்றது. திரையரங்குகளில் வெளியாகவில்லையே என ரசிகர்கள் சற்று கவலையில் இருந்தனர்.

ஓடிடியில் வெளியானாலும் இந்த திரைப்படம் உலக அளவில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட தோடு பல விருதுகளையும் குவித்தது. இந்த நிலையில், தற்போது 12வது தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜெய்பீம் வென்றுள்ளது.

மேலும் மிகச்சிறப்பாக இந்த படத்தில் ராஜ்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மணிகண்டன் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார். இதனை சூர்யாவின் 2டி நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

3 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

5 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

6 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

6 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

8 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

8 hours ago