கமல்ஹாசன்-ஸ்ரீவித்யா திருமணம் நடைபெறாத காரணம் இதுதான்! உண்மையை உடைத்த பிரபலம்!

srividya kamal haasan

மறைந்த நடிகை ஸ்ரீவித்யா சிறுவயதிலேயே இருந்து சினிமா துறையில் நடித்து மிகவும் பிரபலமானவர். தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருந்த சமயத்தில் நடிகர் கமல்ஹாசனைக் காதலித்தார்.

கமல் மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் சில படங்களில் இணைந்து நடித்தனர். அந்த நேரத்தில் அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தனர். இதனை கமல்ஹாசனும் கூட பேட்டிகளில் வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறார். இருப்பினும் சில காரணங்களால் இவர்கள் இருவராலும் திருமணம் செய்துகொள்ள முடியாமல் போனது.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீவித்யாவின் அண்ணன் மனைவி விஜயலட்சுமி கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீவித்யாவின் திருமணம் எதற்காக நடைபெறாமல் போனது என்ற காரணத்தை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஸ்ரீவித்யா. நான் மிகவும் நெருக்கமாக பழகினேன். அவர் கமல்ஹாசனை எவ்வளவு நேசித்தார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என் கணவர் ஷங்கரும் கமலும் நல்ல நண்பர்கள். கமல் ஒருமுறை ஷங்கரிடம் ஸ்ரீவித்யாவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பவதாகவும் கூறினார்.

விக்ரமுக்கு அந்த மாதிரி நடிக்கவே தெரியாது! பரபரப்பை கிளப்பிய ராஜகுமாரன்!

ஆனால், அதற்கு என்ன விஷயம் என்று வீட்டில் பேசிவிட்டு சொல்கிறேன் என்று என்னுடைய கணவர் சங்கர் கூறிவிட்டார். வீட்டில் சொன்னபோது ஸ்ரீவித்யாவின் அம்மா ஒத்துக்கொள்ளவே இல்லை. இருவரும் ஒரே துறையில் உள்ளவர்கள். இந்தக் கல்யாணம் நடக்காது என்றார். ஸ்ரீவித்யாவுக்கு ஹீரோயினாக அந்த சமயம் நல்ல பட வாய்ப்புகள் வந்துகொண்டிருந்ததால், இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று கூறினார்.

ஸ்ரீவித்யாவை விட கமல் ஒரு வயது இளையவர் என்பதும் பிரச்சனையாகிவிட்டது. ஆனால் ஸ்ரீவித்யா கமலை மிகவும் நேசித்தார். இருந்தாலும் வீட்டில் ஒற்றுக்கொள்ளாத காரணத்தால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை ” எனவும் விஜயலட்சுமி  கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்