Categories: சினிமா

‘அன்னபூரணி’ திரைப்படம் நெட்பிளிக்ஸில் இருந்து அதிரடி நீக்கம்.!

Published by
கெளதம்

நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நயன்தாரா நடிப்பில்  கடந்த ஆண்டு டிசம்பர் 1 ம் திரையரங்குகளில் வெளியானது. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வெற்றியடைந்துள்ள நிலையில், படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கிருந்தது.

அதன்படி, கடந்த டிசம்பர் மதம் 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. படத்தை பார்த்துவிட்டு பலர் நெகடிவ் விமர்சனங்களை கூறினர். படத்தில் நடிகை நயன்தாரா சமையல் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார். படத்தில் வரும் ஒரு காட்சியில் இந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ‘லவ் ஜிகாத்’தை ஆதரிப்பதாகவும் கூறி மும்ப்பை காவல் நிலையத்தில் நயன்தாரா மீது புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி, நடிகை நயன்தாரா மீது மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் புகார் அளித்திருந்தார். புகாரின்படி, “வேண்டும் என்றே இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது, மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும்” தெரிவிக்கப்பட்டது.

நடிகர் விஜய்யா இது? லேட்டஸ்ட் கெட்டப்பை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்!

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரை அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸில் இடம்பெறாது என ZEE நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, தமிழ்நாட்டில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது, இப்படியான எந்த சர்ச்சை மற்றும் கண்டனங்கள்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னபூரணி

அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா என்பவருடைய இயக்கத்தில், நடிகை நயன்தாரா நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அன்னபூரணி. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நயன்தாரா அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

2 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

3 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

3 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

4 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

4 hours ago

ஒரே நாடு ஒரே தேர்தல்: ‘வசதி இருந்தா முடிஞ்சா பண்ணிக்கோங்க’ – விஜய் ஆண்டனி!

சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…

5 hours ago